/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வெளிநபர்கள் வாகனங்களால் மருத்துவமனையில் இடையூறு

ADDED : ஜூலை 17, 2024 11:25 PM

வெளிநபர்கள் வாகனங்களால் மருத்துவமனையில் இடையூறு
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வெளியூர் வேலைக்கு செல்வோர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்திவிட்டு பேருந்து வாயிலாக வேலைக்கு சென்று விடுகின்றனர்.
ஏற்கனவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோரின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சம்பந்தமில்லாத வெளியாட்கள் மருத்துவமனைக்குள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, வெளியாட்களின் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.