/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மீடியனில் குப்பை எரிப்பு;சேதமான மின்கம்பம் மாற்ற வேண்டும்

ADDED : ஜன 08, 2025 09:30 PM

மீடியனில் குப்பை எரிப்பு
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மீடியனில் உள்ள செடிகளை வெட்டி பராமரிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு வெட்டப்படும் செடிகளை, சாலையின் மீடியனில் குவித்து தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், ஏற்படும் புகையினால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
செடிகள் மற்றும் குப்பையை மீடியனில் எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா. பார்த்திபன், மாத்துார்.
சேதமான மின்கம்பம் மாற்ற வேண்டும்
ஸ்ரீபெரும்புதுார் -சிங்கபெருமாள் கோவில் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், போந்துாரில் அருகே உள்ள ‛பெட்ரோல் பங்க்' எதிரே 10 நாட்களுக்கு முன், ‛ரிவர்ஸ்' வந்த லாரி சாலையோரம் இருந்த இரும்பு மின் கம்பத்தின் மீது மோதியது.
இதில், இரும்பு மின்கம்பத்தின் அடி பகுதி சேமடைந்து வளைந்து உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், சேதடைந்த உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மா. ராஜேந்திரன்
ஸ்ரீபெரும்புதுார்.