/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பாதசாரிகள் அவதி

ADDED : மார் 27, 2025 12:42 AM

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பாதசாரிகள் அவதி
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், குமரகோட்டம் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மேற்கு ராஜ வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரஜினிகாந்த்,
காஞ்சிபுரம்.