/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் துார்வார எதிர்பார்ப்பு
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் துார்வார எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் துார்வார எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் துார்வார எதிர்பார்ப்பு
ADDED : பிப் 20, 2025 12:36 AM

மழைநீர் வடிகால்வாய் துார்வார எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சி, மேட்டுத்தெருவில் மழைநீர் மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் புல் வளர்ந்துள்ளது. இதனால், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் முழுமையாக வெளியேறாத சூழல் உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ரவி, சிங்காடிவாக்கம்.
நான்காவது முறையாக 'மேன்ஹோல்' சேதம்
ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.
அம்மன் கோவில் ஆர்ச் அருகே, சாலை நடுவே பாதாள சாக்கடை ‛மேன்ஹோல்' உடைந்து சேதமடைந்ததால், கார் மற்றும் இருக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன. நெடுஞ்சாலைத் துறையினர், கடந்த வாரம் மூன்றாவது முறையாக, மேன்ஹோல் மூடியை சீரமைத்தனர். நேற்று முன்தினம் மீண்டும் மேன்ஹோல் மூடி உடைந்தது.
இதனால், மீண்டும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாக மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்.
- மு.சுரேஷ், ஸ்ரீபெரும்புதுார்.
சாலையோர பள்ளம் மண் அணைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள குருவிமலை வழியாக, களக்காட்டூர், காலுார், அவளூர், ஆற்பாக்கம், உத்திரமேரூர், அச்சிறுபாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், குருவிமலை அம்மா பூங்கா அருகே, சாலையோரம் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, குருவிமலை கிராமத்தில் சாலையோர பள்ளத்திற்கு மண் அணைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மு.சிவகுருநாதன், குருவிமலை.
மானாம்பதி அரசு மாணவர் விடுதியை சுற்றி வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கு, வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் மாணவர்கள் வசதிக்காக, மானாம்பதியில் அரசு மாணவர் நல விடுதி அமைக்கப்பட்டு இயங்குகிறது.
தற்போது, இந்த விடுதியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளிக்கு செல்கின்றனர். இந்த விடுதிக்கான கட்டடத்தை சுற்றிலும், செடி, கொடிகள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து, ஆபத்து ஏற்படக்கூடும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே, மானாம்பதி அரசு மாணவர் விடுதியை சுற்றி வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.வாசுதேவன், மானாம்பதி.
மின் கம்பியில் படர்ந்த கொடிகள் வாரிய அதிகாரிகள் பாராமுகம்
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, பாரதி நகரில் 500க்கும் வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, கம்பங்கள் வழியே மின் வழித்தடம் செல்கிறது.
பாரதி நகர் ஒன்றாவது பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து, மின் கம்பியில் சூழ்ந்துள்ளது. இதனால், மின்கம்பி ஒன்றோடு ஒன்று இணைந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, ஸ்ரீபெரும்புதுார் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

