/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
/
காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
காஞசிபுரம் : புகார் பெட்டி :மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
ADDED : அக் 29, 2025 08:02 PM

பட்டுப்போன மரக்கிளையால் ஏனாத்துாரில் விபத்து அபாயம் கா ஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், கோனேரிகுப்பம் ஆகிய பகுதியினர், ஏனாத்துார் கிராம சாலை வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஏனாத்துார் சாலையோரம், காட்டுவா மரம் பட்டுப்போய் உள்ளது. பலமான காற்று அடித்தால் மரக்கிளை உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சாலையோர மரக்கிளை உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
- நா.அசோகன், காஞ்சிபுரம்.