/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் படர்ந்துள்ள முட்செடிகள் டூ - வீலர் ஓட்டிகள் அவதி

ADDED : மே 21, 2025 07:59 PM

சாலையில் படர்ந்துள்ள முட்செடிகள் டூ - வீலர் ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டியில் இருந்து, தும்பவனம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில், மின்மாற்றி அமைந்துள்ள பகுதியில், சாலையோரம் வளர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகளின் கிளைகள் வளர்ந்து சாலை பக்கம் நீண்டு படர்ந்துள்ளன.
இதனால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது சீமைகருவேல செடியின் கூர்மையான முட்கள், கண்கள், முகம், கை உள்ளிட்ட உடல் பாகங்களை பதம் பார்த்து விடுகின்றன.
எனவே, தும்பவனம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
சின்ன காஞ்சிபுரம்.