/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; மோட்டார் பழுதால் பயனின்றி வீணாகும் குடிநீர் தொட்டி

ADDED : செப் 18, 2025 02:00 AM

மோட்டார் பழுதால் பயனின்றி வீணாகும் குடிநீர் தொட்டி
உ த்திரமேரூர் பேரூராட்சி, கிண்டி வெங்கடசாமி நாயுடு தெருவில், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுக்கு முன் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
வீட்டு உபயோக தண்ணீர் தேவைக்காக, இந்த குடிநீர் தொட்டியை அப்பகுதி மக்கள் பயன் படுத்தி வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற, ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது.
இதை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது.
மின் மோட்டாரை சீரமைத்து மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சீனிவாசபெருமாள், உத்திரமேரூர்.