/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?

ADDED : செப் 24, 2025 10:18 PM

போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வீடுகள், கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மின்தட பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை மின்வாரியத்தினர் சில தினங்களுக்கு முன் வெட்டிவிட்டனர். சாலையில் விழுந்த மரக்கிளைகளை அகற்றவில்லை.
இதனால், சாலையில் விழுந்துள்ள மரக்கிளையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்க இடம் இல்லாததால், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் போடப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராஜேஸ்வரி, காஞ்சிபுரம்.