/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
நிழற்கூரை இல்லாததால் பயணியர் அவதி
/
நிழற்கூரை இல்லாததால் பயணியர் அவதி
ADDED : மார் 17, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் வாயிலாக, திருப்புட்குழி, முசரவாக்கம், சிறுணை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் வேலுார், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவருகின்றனர்.
பயணியர் காத்திருக்கும் வகையில் நிழற்கூரை வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால், கிராமப்புறபயணியர் வெயில் மற்றும் மழையில் அவதிப்பட வேண்டி உள்ளது.
எனவே, கிராமப்புற பயணியரின் நலன் கருதி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூரை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- -எஸ். நடராஜன்,
காஞ்சிபுரம்.