/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
/
மின்கம்பம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
UPDATED : செப் 04, 2025 08:45 AM
ADDED : செப் 04, 2025 03:06 AM

உத்திரமேரூர் பேரூராட்சி, பாவோடும் தோப்பு தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புக்காகவும், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையிலும் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கின் வெளிச்சத்தை செடி, கொடிகள் மறைக்கின்றன.
மேலும், மின்ஒயர்களின் மீது செடி, கொடிகள் படர்வதால், மழையின்போது மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்கம்பத்தை சுற்றியும் படர்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். குமரவேல், உத்திரமேரூர்.