/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
புகார் பெட்டி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
புகார் பெட்டி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
புகார் பெட்டி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : மார் 31, 2025 11:46 PM

வாலாஜாபாத் ராஜவீதியில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பலர், கடைகளுக்கான கட்டடத்தை தாண்டி, சாலையையொட்டி விற்பனை பொருட்களை குவித்து வியாபாரம் செய்கின்றனர்.
பழக்கடைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள் மற்றும் உணவகம், டீக்கடை என, விதிவிலக்கில்லாமல் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இதேபோன்று, சாலையோரங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள், பெட்டி கடைகள் போன்றவையும் சாலை ஓரங்களை ஆக்கிரமித்தே அமைக்கப்படுகின்றன.
இதனால், ராஜவீதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல தரப்பினரும் அவதிபடுகின்றனர். எனவே, வாலாஜாபாதில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி. சண்முகம்,
வாலாஜாபாத்.