ADDED : நவ 11, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாணவ – மாணவியருக்கு போதிய வகுப்பறை இல்லாததால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், புதிய வகுப்பறை கட்டப்பட்டது.
ஆனால், பள்ளியின் பின்புறம் நீர்நிலையான குளம் உள்ளதால், மாணவ – மாணவியர் அங்கு சென்று விளையாடும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், அந்த புதிய வகுப்பறை கட்டடம், பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பள்ளியின் பின்புறம் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பினால், வகுப்பறைகளை பயன்படுத்தலாம். எனவே, அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– செந்தில்குமார், சிவாடா.
