/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி ஊராட்சியில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
/
புகார் பெட்டி ஊராட்சியில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
புகார் பெட்டி ஊராட்சியில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
புகார் பெட்டி ஊராட்சியில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
ADDED : ஜன 13, 2025 11:58 PM

ஊராட்சியில் அதிகரிக்கும்
பேனர் கலாசாரம்
பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிபேட்டை. உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நன்றி மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தின் பல்வேறு பகுதியில் சாலையோரங்களில் விளம்ப பேனர்களை வைத்துள்ளனர்.
மாநில நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேனர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் இருந்துவர்களே தற்போது அதை மீறும் விதமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
சாலையோரத்தில் உள்ள பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- ஆர்.செல்வகுமரன், அத்திமாஞ்சேரிபேட்டை.