/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி :ஊத்துக்கோட்டையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது
/
புகார் பெட்டி :ஊத்துக்கோட்டையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது
புகார் பெட்டி :ஊத்துக்கோட்டையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது
புகார் பெட்டி :ஊத்துக்கோட்டையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது
ADDED : ஜன 23, 2025 12:55 AM

ஊத்துக்கோட்டையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், இவ்வூர் உள்ளதால், போக்குவரத்து நிறைந்து காணப்படும். தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் நிலையில், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
இங்குள்ள அண்ணாதுரை சிலை அருகில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருட்டாக உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தில் தான் செல்கின்றன. எனவே, பேரூராட்சி நிர்வாகம், பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.
- வி. ராஜா, ஊத்துக்கோட்டை.