/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி: அம்மன் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

ADDED : பிப் 11, 2025 12:28 AM

திருத்தணி தாலுகா, தும்பிகுளம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் எதிரே அம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
மேலும், திருவிழா நாட்களில் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி வழிபடுவர். இந்நிலையில், தற்போது, குளம் பராமரிப்பின்றியும், சுற்றியும் செடிகள் வளர்ந்தும் குப்பை கொட்டப்படுகின்றன. இதனால் குளத்து தண்ணீர் அசுத்தம் ஆவதுடன், புதையும் நிலை உருவாகும்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கிறேன்.
- ஆர்.சேகர், தும்பிகுளம்.