UPDATED : அக் 01, 2026 01:18 PM
ADDED : அக் 01, 2026 10:20 AM
அ நிறம் | அளவு
பொன்னேரி – மீஞ்சூர் நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியானது, மூன்று சாலைகள் சந்திக்கும் இடமாகும்.
இங்கு, அனுப்பம்பட்டு – மேட்டுப்பாளையம், சிறுவாக்கம் – மேட்டுப்பாளையம் ஆகிய கிராமப்புற சாலைகள் இணைகின்றன.
இந்த சாலைகள் சந்திக்கும் பகுதியில், வேகத்தடை எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலையிலும், கிராமப்புற சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
– கார்த்திக், பொன்னேரி.
