/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; செடி, கொடிகள் வளர்ந்த கும்மிடி மின் நிலையம்

ADDED : ஜூன் 18, 2025 10:48 PM

செடி, கொடிகள் வளர்ந்த கும்மிடி மின் நிலையம்
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், மின் கட்டணம் செலுத்துவதற்கு என, தனி கட்டடம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், வளாகம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
அதிலிருந்து அட்டைப்பூச்சி, நத்தை உள்ளிட்டவை வெளியேறி, மின் கட்டணம் செலுத்தும் கட்டட பகுதியில் சூழ்ந்துக் கொள்கிறது. இதனால், மின் கட்டணம் செலுத்த வரும் பயனீட்டாளர்கள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துணைமின் நிலைய வளாகத்தை, துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜெகதீஸ்வரன், கும்மிடிப்பூண்டி.