/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் புகார் பெட்டி;சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

ADDED : ஜூலை 02, 2025 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சி ரயில் நிலையம் செல்லும் சாலையில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கப்பட்டது.
தற்போது கால்வாய் சேதமடைந்து உள்ளதால், வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் ரயில் நிலையம் செல்லும் சாலையோரத்தில் அவ்வப்போது செல்வதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.மு.புகழ்வேந்தன், மணவூர்.