/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர்:புகார் பெட்டி;சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர்:புகார் பெட்டி;சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஆக 13, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
தக்கோலம் --- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது, புளியங்குண்டா கிராமம்.
இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, விரிசலடைந்து கம்பி வெளியே தெரிகிறது.
நெடுஞ்சாலை ஓரம் உள்ள இந்த மின்கம்பம், காற்று பலமாக வீசினால் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பகுதி மக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றியமைக்க திருவாலங்காடு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.முனிசேகர், புளியங்குண்டா.