/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ADDED : ஜன 22, 2025 07:24 PM
ஏரிக்கரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
திருத்தணி, அமிர்தாபுரம் ஏரிக்கு, முருகன் மலைக்கோவில் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறி, திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நீர்வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும்.
இந்நிலையில், ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால், மழைநீர் செல்வதற்கு வழியின்றி, மாநில நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் சாலை, குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.
மேலும், ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் தண்ணீரின்றி உள்ளது. எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.
- எஸ்.குமார்,
மேல்திருத்தணி.