/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; இருள் சூழந்த சாலையில் மின் விளக்கு வேண்டும்

ADDED : ஜூன் 12, 2025 02:49 AM

இருள் சூழந்த சாலையில் மின் விளக்கு வேண்டும்
பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கல் மற்றும் மண் குவாரிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கனிம வளத்தை கொண்டு செல்கின்றன. இந்த மார்க்கத்தில் உள்ள நொச்சிலி கூட்டுச்சாலையில் இரவு நேரத்தில் இந்த பகுதியில் மைய தடுப்பு இருப்பதை வாகன ஓட்டிகள் கவனிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இருள் சூழந்த இப்பகுதியில் மைய தடுப்பில் உள்ள பிரதிபலிப்பான்களை கொண்டே அடையாளம் காண வேண்டிய நிலை உள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்து உணர்த்தும் படி இங்கு, மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கே. மகாராஜன், பள்ளிப்பட்டு.