/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;கான்கிரீட் பெயர்ந்த சாலையால் அவதி
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;கான்கிரீட் பெயர்ந்த சாலையால் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;கான்கிரீட் பெயர்ந்த சாலையால் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;கான்கிரீட் பெயர்ந்த சாலையால் அவதி
ADDED : பிப் 05, 2025 02:09 AM

கான்கிரீட் பெயர்ந்த சாலையால் அவதி
கடம்பத்துார் ஊராட்சியிலிருந்து, ரயில் நிலையம் வழியாக, அதிகத்துார், மணவாள நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், 2021ம் ஆண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை தற்போது கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நடந்து செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடம்பத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- த.மணி,
கடம்பத்துார்.