ADDED : நவ 11, 2026 08:48 PM

அ நிறம் | அளவு
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகர் பகுதியில் உள்ள பூங்கா, பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
பூங்கா வளாகம் முழுதும் களைச்செடிகள் வளர்ந்து உள்ளன. அங்குள்ள நடைபாதை முழுதும், புதர் சூழ்ந்து இருப்பதால், நடைபயிற்சி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மாலை நேரங்களில், வயதானவர்கள் பூங்காவில் ஓய்வெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– வினோத், பொன்னேரி.
