ADDED : நவ 16, 2026 06:50 PM

அ நிறம் | அளவு
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை பஜாரில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு அத்திவாசிய பணிகள் காரணமாக, திருத்தணி மற்றும் சோளிங்கருக்கு பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர்.
இதனால், அந்த பேருந்து நிறுத்தத்தில், அதிகாலை 5:00 மணி முதல், நள்ளிரவு 11:00 மணி வரை, எப்போதும் 100க்கும் மேற்பட்ட பயணியர் இருப்பர்.
இந்நிலையில், இங்குள்ள பயணியர் நிழற்குடை முன் ஆக்கிரமித்து, சிலர் தேங்காய், பூ போன்ற கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.
இதனால், பயணியர் நிழற்குடைக்கு செல்ல முடியாமல், வெளியே காத்திருந்து அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ராகவன், கே.ஜி.கண்டிகை.
