/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்
/
மது அருந்தும் கூடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்
ADDED : ஜூலை 18, 2025 11:29 PM

தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், உழவர் சந்தை பின், ஏ.பி.டி., ரோட்டில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப் படுகிறது.
- மணியன், கருவம்பாளையம்.
சாலையை சீரமைக்கலாமே
திருப்பூர், அங்கேரிபாளையம் விரிவு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
- விஜி, கூட்டுறவு நகர்.
n திருமுருகன்பூண்டி, பெருமாள் கோவில் அருகே, சாலையின் இடது புறம் சேதமாகியுள்ளது. எதிரெதிரே வாகனம் வரும் போது தடுமாற வேண்டியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- விஜயலட்சுமி, திருமுருகன்பூண்டி.
வேகத்தடை வேண்டும்
நெருப்பெரிச்சல், பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை வளைவில் வாகனங்கள் தாறுமாறாக பயணிக்கிறது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ஈஸ்வரமூர்த்தி, நெருப்பெரிச்சல்.
பணிகள் மந்தம்
கணபதிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. குழாய் உடைப்பை சரிசெய்தவர்கள், சரிவர மண் போட்டு சாலையை சீரமைக்கவில்லை. மண் குவியலாக உள்ளது.
- ஸ்ரீ தரன், கணபதிபாளையம்.
போலீசார் கவனத்துக்கு...
திருப்பூர், காந்தி நகர் பஸ் ஸ்டாப்பில் மது அருந்தி விட்டு அங்கேயே துாங்குகின்றனர். இப்பகுதியில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தி, 'குடி'மகன்களிடம் இருந்து, பஸ் ஸ்டாப்பை மீட்க வேண்டும்.
- நட்ராஜன், காந்திநகர்.
கால்வாய் அடைப்பு
அவிநாசி அருகே தேவராயம் பாளையம், பிள்ளையார் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- சண்முகம், தேவராயம்பாளையம்.
சேதமாகும் சாலை
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் உழவர் சந்தை ஸ்டாப் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமாகி வருகிறது.
- செல்வராஜ், தென்னம்பாளையம்.