ADDED : ஜூலை 03, 2026 03:37 AM

தெருவிளக்கு எரியாது
ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட்டில் இருந்து ஒற்றைக்கண் பாலம், அணைக்காடு வரை இரண்டு கி.மீ., துாரத்துக்கு, 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை.
- பட்டீஸ்வரன், சபாபதிபுரம்.
கம்பி தெரியுது
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு - கோல்டன்நகர் ரோடு ரயில் பாலத்தின் கீழ் கான்கீரிட் சாலை சேதமாகி கம்பி வெளியே தெரிகிறது.
- விஜயலட்சுமி, கோல்டன்நகர்.
ஆக்கிரமிப்பால் ஆபத்து
திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் சாலை குறுகலாக உள்ளது. போக்குவரத்து அதிகமாகிறது; அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
- சண்முகபிரணவ், பெரியாயிபாளையம்.
அபாயம் உள்ளது
திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் ஆறாவது வீதி வளைவில் குழாய், கேபிள் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகளுக்கு அபாயம் உள்ளது.
- தேவிபிரியா, செங்குந்தபுரம்.
குடிநீர் வீணாகுது
அனுப்பர்பாளையம், திலகர் நகர் ஸ்டாப்பில் குடிநீர்வடிகால் வாரிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி நிறைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது.
- மணி, திலகர்நகர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, சபாபதிபுரம், ரயில்வே மேம்பாலம் அருகே குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.
- தம்புராஜ், சபாபதிபுரம்.
கழிவுநீர் பாயுது
போயம்பாளையம், கணபதி நகர், அபிராமி தியேட்டர் வீதியில் முட்புதர் நிறைந்து இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது; கொசுத்தொல்லை அதிகமாகிறது.
- சங்கர், போயம்பாளையம்.
தார்ரோடு எப்போது?
கூலிபாளையத்தில் இருந்து நஞ்சராயன்நகர் செல்லும் சாலை தார்ரோடாக மாற்ற வேண்டும். மண் சாலையாக உள்ளது.
- மீரான், நஞ்சராயன்நகர்.
சப்ளை தாமதமாகுது
பெரிச்சிபாளையம், மாசாணியம்மன் கோவில் வீதியில், பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீருக்கு வழியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
- மணிகண்டன், பெரிச்சிபாளையம்.
கால்வாய் உடைந்தது
மண்ணரை, கருப்பராயன் கோவில் பாதையில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.
- துரைராஜ், மண்ணரை.
