/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் கடும் பாதிப்பு
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் கடும் பாதிப்பு
நடைபாதையில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் கடும் பாதிப்பு
நடைபாதையில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் கடும் பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2025 09:12 PM

கால்வாயில் குப்பை உடுமலை - தாராபுரம் ரோடு பெரியகோட்டை ஊராட்சி தனியார் பள்ளி அருகில், பி.ஏ.பி., கால்வாயில் கண்ணாடி மற்றும் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், உடுமலை.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு உடுமலை, வ.உ.சி., வீதியில் நடைபாதையில் வணிக வளாகங்கள் ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் ரோட்டில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.
- கண்ணன், உடுமலை.
பராமரிப்பு இல்லை உடுமலை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலக கட்டடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இக்கட்டடத்தை பராமரிக்க அரசுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
பயணியர் எதிர்பார்ப்பு உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் நிழற்கூரை இல்லை. வெயில் காலத்திலும், மழை நேரத்திலும் வெப்பமும், மழைச்சாரலும் அடிப்பதால், பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். முறையான நிழற்கூரை அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
- ரேணுகா, உடுமலை.
போக்குவரத்து நெரிசல் உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் சந்தையிலிருந்து வெளியில் வரும் வாகனங்கள் வரைமுறையில்லாமல் வேகமாக வருவதால், பஸ் ஸ்டாண்டு பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். சரக்கு வாகனங்கள் ரோட்டில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மணிகண்டன், உடுமலை.
'குடி' மகன்கள் தொல்லை உடுமலை, சர்தார் வீதி பிரதான ரோட்டில் உள்ள மது கடையால் 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிக்கிறது. மது அருந்திவிட்டு பலரும் ரோட்டில் அரைகுறையான ஆடைகளுடன் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். மேலும் அருகிலுள்ள பூங்காவை திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.
- தட்சிணாமூர்த்தி, உடுமலை.
ரோட்டில் பள்ளம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் கீழே விழுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, ரோட்டை சீரமைக்க விரைவில் நடவதிக்கை எடுக்க வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
புதரை அகற்றணும்! கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பொதுக்கிணற்றின் சுற்றுப்பகுதியில், செடி, கொடிகள் படர்ந்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் இருப்பதால், புதரை அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணி, கிணத்துக்கடவு.
கால்நடைகளால் தொல்லை பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட குடியிருப்பு பகுதியில் அதிகளவு கால்நடைகள் உலா வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் சிறு விபத்துகள் ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினரோ அல்லது போலீசாரோ கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அலெக்ஸ், பொள்ளாச்சி.
ஆபத்தான பயணம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரே, கடைவீதியில் இருந்து 'ஒன்வே'யில் அதிகளவு வாகனங்கள் பயணிப்பதால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் கவனித்து கட்டுப்படுத்த வேண்டும்.
- ரஞ்சித், பொள்ளாச்சி.
ரோட்டோரத்தில் பள்ளம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக, ரோட்டோரத்தில் பள்ளமாக உள்ளது. இதனால், குழந்தைகளை விடுவதற்கு வரும் பெற்றோர் நிலை தடுமாறி விழுகின்றனர். ரோட்டோரத்தில் கட்டட கழிவு மண்ணை கொட்டி, ரோடு மட்டத்துக்கு சமப்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகமோ, அல்லது பள்ளி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சேதுராமன், பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் 'யு டேர்ன்' பகுதியில், வாகனங்கள் திரும்பும் போது, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இங்கு ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.
-- சதீஷ், கோவில்பாளையம்.