தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருப்பூர்/ கரையோரம் குப்பை; திருத்தலாமா தப்பை!

 கரையோரம் குப்பை; திருத்தலாமா தப்பை!

 கரையோரம் குப்பை; திருத்தலாமா தப்பை!


ADDED : ஜூன் 19, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 02:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபாய மின் கம்பம்

திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், ஞானபிரகாசம் முதல் வீதியில் மின் கம்பம் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. - ராஜேஷ்குமார், மாஸ்கோ நகர்.

அவிநாசி ரோடு, அம்மாபாளையம் சிட்டி கிளப் எதிரே மின்கம்பம் உடைந்த நிலையில் உள்ளது.

- சந்திரசேகர், அம்மாபாளையம்.

கழிவுநீர் தேக்கம்

பலவஞ்சிபாளையம், ஐஸ்வர்யா நகர் 3வது வீதியில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

- விஷ்ணு, ஐஸ்வர்யா நகர்.

கடும் துர்நாற்றம்

ராக்கியாபாளையம், ஆர்.வி.இ. நகர் 5வது வீதியில் குடியிருப்புகள் அருகே குப்பை கொட்டி தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

- சுகந்தி, ஆர்.வி.இ. நகர்.

சுகாதாரக் கேடு

நல்லுார்-முத்தணம்பாளையம் சாலையில், நற்கருணை நகரில் குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- திருமலைச்சாமி, நற்கருணை நகர்.

பல்லாங்குழி சாலை

15 வேலம்பாளையம், சேவாலயா பார்மசி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

- விஜி, வேலம்பாளையம்.

சேதமடைந்த சாலை

ஆர்.வி.இ. லே--அவுட், ஷெரீப் காலனி சாலை வளைவு பகுதியில் சேதமடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும். - சங்கர், ஷெரீப் காலனி.

எரியாத விளக்கு

திருப்பூர், 21வது வார்டு, குமரானந்தபுரம், இட்டேரி வீதியில் 10 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.

- சுரேஷ், குமரானந்தபுரம்.

முட்புதர் மயம்

ஆண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதுார், முத்து நகரில் குடிநீர் தொட்டியை சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளன. சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

- பிரகாஷ், சின்னியக்கவுண்டன்புதுார்.

குப்பையால் துர்நாற்றம்

வளம் பாலம் அருகே, நொய்யல் வீதி ஆற்றங்கரையில் குப்பை தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

- முகமது சல்மான், நொய்யல் வீதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us