sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

நள்ளிரவு குடிநீர் சப்ளை; 'ஆபீசரு' யாருங்க!

/

நள்ளிரவு குடிநீர் சப்ளை; 'ஆபீசரு' யாருங்க!

நள்ளிரவு குடிநீர் சப்ளை; 'ஆபீசரு' யாருங்க!

நள்ளிரவு குடிநீர் சப்ளை; 'ஆபீசரு' யாருங்க!


UPDATED : ஆக 18, 2025 07:41 AM

ADDED : ஆக 17, 2025 11:55 PM

Google News

UPDATED : ஆக 18, 2025 07:41 AM ADDED : ஆக 17, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை தேக்கம்

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை வாயில் எதிரே குப்பைகள் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. நடந்து செல்லக் கூட வழியில்லை.

- மோகன்ராஜ் பக்தவச்சலம், டி.எம்.எஸ்., நகர்.

வளையன்காடு பகுதியில் உள்ள ரோடுகளில் ரோட்டோரம் இரண்டு வாரங்களுக்கு மேலாக குப்பை கழிவுகள் தேங்கிகிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.

- சங்கர், வளையன்காடு.

--------

வாகனங்கள் தடுமாற்றம்லட்சுமி நகர் 50 அடி ரோடு பல மாதங்களாக ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கிறது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். - விஜி, கூட்டுறவு நகர்.

----ஒளிராத விளக்குகள்

ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பகுதியிலிருந்து குளத்துப்பாளையம் பகுதி வரை பிரதான ரோட்டில் தெரு விளக்குகள் இல்லை. மின் கம்பங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கம்பங்களில் விளக்குகள் இல்லை.

- துரைராஜ், திருப்பூர்.

கொங்கணகிரி, பிரேமா ஸ்கூல் வீதியில் உள்ள தெரு விளக்கு 2 வாரமாக எரியாமல் உள்ளது. - பழனிசாமி, கொங்கணகிரி.

கருணாகரபுரி, கோல்டன் நகர், மெயின் ரோடு பகுதியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் கடந்த நான்கு நாட்களாக எரியவில்லை. கடுமையான இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

- பால்பாண்டி, நாராயணபுரம்.

மாநகராட்சி 41 வது வார்டு முருகம்பாளையம், பாறக்காடு ஏழாவது வீதியில் அனைத்து தெரு விளக்குகள் கடந்த பல நாட்களாக எரியாமல் உள்ளது.

- கேசவன், முருகம்பாளையம்.

----

மக்காத குப்பைகள்போயம்பாளையம் பழனிசாமி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்களில் பாலிதீன் கழிவுகள் தேங்கி அவதி நிலவியது. பொதுமக்கள் அதை அகற்றி ரோட்டோரம் குவித்து வைத்துள்ளனர். தேங்கி கிடக்கும் கழிவுகள் அகற்ற வேண்டும். - கமலக்கண்ணன், போயம்பாளையம்.

-----

வீணாகும் குடிநீர்

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்புறம் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இந்த பைப் சேதமாகி குடிநீர் வெளியேறிய வண்ணம் உள்ளது. இதனால் அலுவலக வளாகம் முழுவதும் குடிநீர் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. - சந்துரு, திருமுருகன் பூண்டி.

-------------

சாக்கடை அடைப்பு கணபதிபாளையம் பேங்க் ஸ்டாப் பகுதியில் சாக்கடை கால்வாய் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. - பாலு, கணபதிபாளையம்.

பல்லடம் வடுகபாளையம், ஹாஸ்டல் ரோடு, கொங்கு நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் அதிகளவில் உள்ளது. நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. - கே.ஆர்.செல்வகுமார், ஹாஸ்டல் ரோடு.

-----

இதென்ன 'பாதுகாப்பு?'அவிநாசி வடக்கு ரத வீதியில், தனி நபர் ஒருவர் தன் வீட்டு முன்புறம் பெரிய கற்களை வரிசையாக வைத்து பாதுகாப்பு செய்துள்ளார். வாகனங்கள் நிறுத்த முடிவதில்லை. ரோட்டில் செல்லும் வாகனங்கள் ஒதுங்க முடிவதில்லை. - பொதுமக்கள், வடக்கு ரத வீதி.

----

குடிநீருக்கு சிக்கல்

கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் 2வது வீதி, ராகம் தியேட்டர் ரோடு பகுதிகளில், குடிநீர் வினியோகம் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை நடக்கிறது. இதனால் குடிநீர் பிடிப்பதில் பெரும் அவதி நிலவுகிறது. - பாலு, ரங்கநாதபுரம்.

----

வடிகால் சேதம்கொங்கணகிரி பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணியின் போது, அருகேயுள்ள மழை நீர்வடிகாலை சேதப்பபுடுத்தி விட்டனர். இதனால், கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் அதிகரித்து விட்டது. - செல்வம், கொங்கணகிரி.






      Dinamalar
      Follow us