
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைக்கு தீ
திருப்பூர், இடுவம்பாளையம் கிழக்கு மேடு, கொக்குபாறையில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு தீ வைக்கப்படுவதால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- சரவணன், இடுவம்பாளையம்.
தெருநாய் தொல்லை
திருப்பூர் அங்கேரிபாளையம், விக்னேஸ்வரா பள்ளி அருகே தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. அனைத்து தரப்பினரும் மிகுந்த அச்சத்தில் ரோட்டில் நடந்து சென்று வருகின்றனர்.
- சுரேஷ், அங்கேரிபாளையம்
ரியாக்ஷன்
கால்வாய் சீரானது
திருப்பூர், மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் சாக்கடை கால்வாய் துார்வாரப்பட்டு சரி செய்யப்பட்டது.
- ஆனந்தராஜா, கருவம்பாளையம்.
'சிசிடிவி' ரெடி
திருப்பூர், வீரபாண்டியில் சேதமடைந்து இருந்த 'சிசிடிவி' கேமராக்கள் சரி செய்யப்பட்டது.
- செல்வராஜ், மீனாம்பாறை.

