தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருப்பூர்/ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்


ADDED : ஜூலை 20, 2025 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கால்வாய் ஆக்கிரமிப்பு

எம்.எஸ்., நகர் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு, கால்வாயை ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன.

- ராஜேந்திரன், எம்.எஸ்., நகர்.

சாலையில் பள்ளம்

பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்து ஓடக்காடு செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- கோவிந்தசாமி, பங்களா ஸ்டாப்

கழிவுநீர் தேக்கம்

ராக்கியாபாளையம் சேரன் நகரில் அடுக்குமாடி வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ரோட்டில் தேங்கி நிற்கின்றது. அப்பகுதியை மக்கள் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன்.

சேடர்பாளையத்தில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல், தெருக்களில் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது.

- பிரதாப், சேடர்பாளையம்.

அவசர கதி

திருமுருகன்பூண்டி, மகாலட்சுமி டவுன்ஷிப்பில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், தார் ரோடு போடுவதற்கான பணிகள் நடக்கிறது.

- கணேஷ்மூர்த்தி, மகாலட்சுமி டவுன்ஷிப்

ரியாக்ஷன்

நடராஜ் தியேட்டர் பாலம் ரோட்டில் நடைபாதையில் உள்ள கற்கள் அகற்றப்பட்டன.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

தாராபுரம் ரோடு புதுார் பிரிவில் கழிவு நீர் தேக்கம் சரி செய்யப்பட்டது.

- மீனாட்சிசுந்தரம், கரட்டாங்காடு

தாடிக்காரன் முக்கில் இருந்து நடராஜ் தியேட்டர் செல்லும் ரோட்டில் தெருவிளக்கு சரி செய்யப்பட்டது.

- கந்தசாமி, ஆலாங்காடு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us