sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

/

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி 'உறக்கம்'


ADDED : ஜூன் 25, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகாதார சீர்கேடு

கணக்கம்பாளையம் - பொங்குபாளையம் வழி ஆர்.எஸ்., புரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- நாகராஜ், பொங்குபாளையம் (படம் உண்டு)

சாலை சேதம்

காங்கயம் ரோடு, டி.எஸ்.கே., மருத்துவமனை எதிரே கதிர் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- கண்ணன், கதிர் நகர். (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், பி.என்., ரோடு, மூம்மூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- கிருபானந்தன், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

திருப்பூர், முதல் வார்டு, இந்திரா நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- விக்னேஸ்வரன், இந்திரா நகர். (படம் உண்டு)

திருப்பூர், நெருப்பெரிச்சல் சாலையில் பாதி வரை மண் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். மண்ணை அகற்ற வேண்டும்.

- விஜி, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)

இதுவா சீரமைப்பு?

கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில், நாதன் மாவு மில் விரிவு அருகே சாலை சரிந்து விடாமல் இருக்க, கற்கள் வைத்து அடுக்கப்பட்டுள்ளது. கற்களை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், 39வது வார்டு, ஜெய் நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

- ராஜா, ஜெய் நகர். (படம் உண்டு)

கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு) திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சுத்தமானது கால்வாய்

திருமுருகன்பூண்டி முதல் வார்டு, நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

- மனோகர், நெசவாளர ்காலனி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us