/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
பெயரோ 'பைவ் ஸ்டார்'; இருளே 'டாப் ஸ்டார்'
/
பெயரோ 'பைவ் ஸ்டார்'; இருளே 'டாப் ஸ்டார்'
ADDED : செப் 22, 2025 12:23 AM

குப்பைக்கு தீ வைப்பு
திருப்பூர் 58வது வார்டு பூங்கா நகரில் குப்பையை கொட்டி ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நேரங்களில் தீ வைத்து சென்று விடுகின்றனர். கடும் துர்நாற்றத்துடன், வாகன ஓட்டிகளை புகை சூழ்கிறது.
- மகேஷ்குமார், கோவில்வழி
அலறும் மைக்
திருப்பூர் எஸ்.வி. காலனியில் காலை முதல் இரவு வரை ஆட்டோக்களில் வியாபாரம் என்ற பெயரில் பெரிய மைக்குகளுடன் அதிக சத்தத்துடன் அலற விடுகின்றனர். பெரும் இடையூறாக உள்ளது.
- உமாசங்கர், எஸ்.வி. காலனி.
தரையே இருக்கை
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் மக்கள், போதிய இருக்கை வசதியில்லாத காரணமாக தரையில் அமர்ந்து வருகின்றனர்.
- ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர்.
ரோடு படுமோசம்
கரைப்புதுார் ஊராட்சி மீனாம்பாறையில் மூன்று ரோடு சந்திக்கும் பகுதியில் சிமென்ட் ரோடு படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
- செல்வராஜ், மீனாம்பாறை.
மண்ணரையில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் கருப்பராயன் கோவில் அருகே பல மாதங்களாக பணிகள் செய்யாமல் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
- ஜமுனா, மண்ணரை.
தண்ணீர்... தண்ணீர்
திருப்பூர் முத்தீஸ்வர் நகரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுப்பதில்லை.
- சோனல், முத்தீஸ்வர் நகர்.
கிடப்பில் பணி
பழங்கரை, பெரியாயிபாளையம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- ஆறுமுகம், பெரியாயிபாளையம்.
இருளே துணை
முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பைவ் ஸ்டார் நகரில் தெருவிளக்கு வசதியில்லாமல் உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- ராஜூ, முத்தணம்பாளையம்.
பெரிதாகும் குழி
திருமுருகன்பூண்டி, கூட்டுறவு நகரில் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குழி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளது.
- விஜி, கூட்டுறவு நகர்.
தேங்கும் கழிவுநீர்
பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையத்தில் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது.
- பாலசுந்தரம், அவிநாசிலிங்கம்பாளையம்.
விபத்து அபாயம்
திருப்பூர் மாநகராட்சி பூங்கா ரோடு குறிப்பிட்ட பகுதியில் ஜல்லிக்கற்களால் நிறைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன், ரோடு போட வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.
வீணாகும் தண்ணீர்
பலவஞ்சிபாளையம், காளிகுமாரசாமி கோவில் எதிரில் தண்ணீர் குழாய் உடைந்து, ரோட்டில் வீணாக தேங்கி நிற்கிறது.
- காயத்ரி, பலவஞ்சிபாளையம்.
---
ரியாக்ஷன்
சீரானது கால்வாய்
கணக்கம்பாளையம் பிரிவில் இருந்து பொங்குபாளையம் செல்லும் ரோட்டில் சாக்கடை நீர் ரோட்டை கடந்தது. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
- பழனிசாமி, கணக்கம்பாளையம்.