ADDED : ஆக 26, 2025 11:49 PM
கழிவுநீரால் துர்நாற்றம் விழுப்புரம், வ.உ.சி., வீதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
விக்கிரமன், விழுப்புரம். இடையூறாக வாகனங்கள் விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் பஸ்கள் வந்து செல்லும் வழியில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது.
சந்திரசேகர், விழுப்புரம். குதிரைகளால் ஆபத்து காணையில் சாலையில் குதிரைகள் திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
சுக்ரிவன், காணை. நாய் தொல்லையால் அச்சம் வளவனுார் பஜார் வீதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
செவ்வந்தி, வளவனுார். சாலை சீரமைக்கப்படுமா? சிறுவந்தாடு கிராமத்திற்கு செல்லும் சாலை பள்ளங்கள் நிறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
கண்ணகி, சிறுவந்தாடு. வழிகாட்டி பலகை இல்லை கோலியனுார் கூட்ரோடு சந்திப்பில் ஊர்களின் திசையை காட்டும் வழிகாட்டி பலகை இல்லாததால் வெளியூர்களில் இருந்து வருவோர் குழப்பம் அடைகின்றனர்.
சிலம்பரசன், விழுப்புரம். மணல் புழுதியால் ஆபத்து விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையை சுத்தம் செய்யாததால் வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
விநாயகம், விழுப்புரம்.