
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாஸ்டிக் தேங்கி துர்நாற்றம்
விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள கோலியனுாரான் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது.
- சந்துரு, விழுப்புரம்.
பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் தொட்டி
மரக்காணம் அருகே முருக்கேரி ஸ்டார் நகர் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா கண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
- கண்ணன், முருக்கேரி.
இடையூறாக நிற்கும் வாகனங்கள்
பிரம்மதேசம் அருகே சிறுவாடி கிராமம் பஸ் நிலையத்தில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள், பொதுமக்கள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- முத்து, சிறுவாடி.
சிதறும் ஜல்லிகளால் விபத்து
திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள நல்லாளம் கிராம பகுதியில் சாலையோரத்தில் கிரஷரில் இருந்து கொண்டு வரப்படும் ஜல்லி, எம்.சாண்ட் சிதறுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளகின்றனர்.
- சந்தானகிருஷ்ணன், நல்லாளம்.