
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீரால் துர்நாற்றம் விழுப்புரம் - காகுப்பம் செல்லும் சாலையில் கழிவுநீரை, வயல்வெளியில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
- விவேக், காகுப்பம். குண்டும், குழியுமான சாலை கோலியனுார் கூட்ரோடு அருகே வளவனுார் செல்லும் சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- சம்பத், வளவனுார். பன்றிகள் தொல்லை விழுப்புரம் கிழக்குபாண்டி ரோடு, லட்சுமி நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாகவுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- விக்னேஷ், விழுப்புரம். குடிபிரியர்களால் அச்சம் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே இரவில் குடிபிரியர்கள் குடித்து விட்டு அலம்பல் செய்வதால் பயணிகள் அச்சத்தோடு செல்கின்றனர்.
- சங்கர், விழுப்புரம்.