நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார சீர்கேடு விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
- சிவக்குமார், விழுப்புரம். குப்பைகளால் துர்நாற்றம் காகுப்பம் சாலையில் குப்பைகள் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- விஜயராமன், விழுப்புரம். குடிமகன்களால் தொல்லை கோவிந்தபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிமகன்கள் பகலிலேயே குடிப்பதால், பெண்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர்.
- கற்பகம், கோவிந்தபுரம். குண்டும் குழியுமான சாலை விழுப்புரம் சுதாகர் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
- சந்தானபாரதி, விழுப்புரம்.