/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலி பணி நியமன மோசடியில் தப்பிய 'தலை'கள்!
/
போலி பணி நியமன மோசடியில் தப்பிய 'தலை'கள்!
PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

''அரசியல் பிரமுகர்களை மட்டும் அனுமதிக்கலாமான்னு கேக்கறா ஓய்...'' என, பெஞ்சில் அமர்ந்தகுப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கர்நாடக அணைகள் நிரம்பி வழிஞ்சு, உபரி நீரை, தமிழகத்துக்கு திறந்து விடறாளோல்லியோ... ஒகேனக்கல் காவிரியில, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தர்ப்பணங்
களுக்கு போலீசார் அனுமதி தரல ஓய்...
''காவிரி கரையோரங்கள்லயும் போலீசார் கண்காணிப்புல ஈடுபட்டு, வந்தவாளை விரட்டியடிச்சா... ஆனா, பா.ம.க.,வை சேர்ந்த பென்னாகரம்
ஒன்றிய சேர்மன் கவிதா மற்றும் அவரது ஆத்துக்காரர் ராமகிருஷ்ணன் மட்டும், போலீசார் சிறப்பு அனுமதியுடன் காவிரியில் முன்னோருக்கு தர்ப்
பணம் கொடுத்தா... இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள்ல பரவி, போலீசாரை எல்லாரும் திட்டிண்டு இருக்கா ஓய்...''
என்றார், குப்பண்ணா.
''அ.தி.மு.க., 'மாஜி' பெயரை சொல்லி, தனிப்பிரிவு போலீஸ்காரர் மிரட்டுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மாவட்டம், சமயபுரம் வர்ற பக்தர்களுக்கு, கோவில்ல பதிவு செய்யாத தொழிலாளிகளும் மொட்டை அடிச்சு பணம் வசூலிக்கிறாங்க... இப்படி 30 - 40 பேர் இருக்காங்க... இவங்க வாரா வாரம், போலீசாருக்கு 5,000 ரூபாய் வரை மாமூல் குடுத்துட்டு
இருந்தாங்க...
''இந்த மாமூல் விவகாரத்துல சிக்கிய எஸ்.ஐ., ராஜ்குமாரை சமீபத்துல எஸ்.பி., அதிரடியா இடமாறுதல் பண்ணிட்டாருங்க... ஆனா, இந்த விவகாரத்துல அந்த ஏரியா
எஸ்.பி., தனிப்பிரிவு போலீசுக்கும் பங்கு இருக்கு...
''எஸ்.ஐ.,யை இடமாறுதல் பண்ணியதும், மொட்டை அடிக்கிறவங்க தனிப்பிரிவு போலீசிடம் வந்து, தாங்கள் தந்த மாமூலை திருப்பிக் கேட்டு தகராறு பண்ணி, கைகலப்பு வரை போயிடுச்சுங்க... ஆவேசமான தனிப்
பிரிவு போலீஸ், 'நான் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் உறவுக்காரன்... என் மேலகைவச்சா நடக்கிறதே வேற'ன்னு மிரட்டி
இருக்காருங்க...
''அதோட, 'நீங்க இனி தொடர்ந்து மொட்டை அடிக்கலாம்... எனக்குபணம் எதுவும் தர வேண்டாம்'னும் டீலிங் பேசி
முடிச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சந்திரமோகன் தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமிஅண்ணாச்சியே கடைசி தகவலை பேச ஆரம்பித்தார்...
''சிவகங்கை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சிலர், பல லட்சம் ரூபாய் வாங்கிட்டு, மூணு பேருக்கு ரேஷன் கடை எடையாளர் பணிக்கு போலி பணி நியமன உத்தரவை குடுத்துட்டாவ வே...
''இந்த விவகாரத்துல, துணைப் பதிவாளர் நிலையில் விசாரணை அதிகாரி நியமிச்சு,
ஒப்புக்கு ஒரு அலுவலக உதவியாளரை மட்டும், 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க... போலி நியமன
உத்தரவு தயாரிச்ச
அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கல வே...
''இது சம்பந்தமா, சிவகங்கை குற்றப்
பிரிவு போலீசில் கூட புகார் தெரிவிக்காம மூடி மறைச்சுட்டாவ... 'கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்துலயே இப்படி ஒரு மோசடி நடந்து, அதுல அவரது உதவியாளர் ஒருத்தருக்கு தொடர்பு இருக்கிறதால தான்
பிரச்னையை அமுக்கிட்டாங்க'ன்னு துறையில இருக்கிற நேர்மையான அதிகாரிகள் புலம்புதாவ வே...'' என முடித்தார்,
அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.