/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓசூரில் 2023ல் நடந்த சாலை விபத்துகளில் 271 பேர் உயிரிழப்பு
/
ஓசூரில் 2023ல் நடந்த சாலை விபத்துகளில் 271 பேர் உயிரிழப்பு
ஓசூரில் 2023ல் நடந்த சாலை விபத்துகளில் 271 பேர் உயிரிழப்பு
ஓசூரில் 2023ல் நடந்த சாலை விபத்துகளில் 271 பேர் உயிரிழப்பு
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிப்பதை வலியுறுத்தி பஸ் ஸ்டாண்ட் அருகே, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.ஐ., சத்யா முன்னிலை வகித்தார். வாகன ஓட்டிகளுக்கு குறும்படங்கள் வாயிலாக, ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்தும், சாலை விதிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் தலைமை வகித்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது:
ஓசூர் உட்கோட்டத்தில் கடந்த, 2023ல் நடந்த சாலை விபத்தில், 271 பேர் உயிரிழந்தும், 441 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும், சாலை விபத்தில் ஒரு மாதத்தில், 23 பேர் உயிரிழந்து வருகின்றனர். இது நமக்கு நடக்காது என மக்கள் எண்ணுகின்றனர். விபத்து, திருட்டு போன்றவை குடும்பத்தில் ஒருமுறை நடந்து விட்டால், அந்த இழப்பை சரிசெய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.