தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மணலியில் கோர சாலை விபத்து உடல் கருகி தொழிலாளி பலி

மணலியில் கோர சாலை விபத்து உடல் கருகி தொழிலாளி பலி

மணலியில் கோர சாலை விபத்து உடல் கருகி தொழிலாளி பலி


PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவொற்றியூர், ணலி, ஆண்டார்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 28; கூலித்தொழிலாளி. மணலி விரைவு சாலையில், சாத்தாங்காடு சந்திப்பு அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து விட்டு, தன் 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் நேற்று மாலை வீடு திரும்பினார்.

சாத்தாங்காடு சந்திப்பு -எம்.எப்.எல்., சந்திப்பு அருகே, எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம், பைக்கில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், பைக்கிற்கு பின்னால் வந்த மகேந்திரா வேனின் முன்பக்கத்தில் பைக் சிக்கியது. இதில், பெட்ரோல் கசியவே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில், கொழுந்து விட்டு எரிய துவங்கியதால், சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சி.பி.சி.எல்., நிறுவன தீயணைப்பு வாகன வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

மேலும், வேன் ஓட்டுனரான, கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 48, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான, சரக்கு வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us