sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

புது ரூட்டில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம்!

/

புது ரூட்டில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம்!

புது ரூட்டில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம்!

புது ரூட்டில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம்!

3


PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வீடியோவுல அழைப்பு விடுத்திருக்காரு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாரு, எதுக்கு அழைப்பிதழ் தந்தது ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, 'கலைஞர் எனும் தாய்'னு ஒரு புத்தகம் எழுதியிருக்காரு... இதை வர்ற 24ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் வாங்குதாரு வே...

''இந்த விழாவுக்கான அழைப்பிதழை, வீடியோ வாயிலா வேலு விடுத்திருக்காரு... அதுல, 'என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு தலைவர் கருணாநிதி குறித்து, நான் எழுதிய நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுறாரு...

''நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இனிய விழாவில் பங்கேற்று சிறப்பிக்க, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்'னு பேசி, தனக்கு வேண்டிய எல்லாருக்கும் அனுப்பிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''புகார் கொடுத்தவர், பீதியில இருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னை, கே.கே.நகர்ல இயங்குற வணிகவரி துறையின் பெண் அதிகாரி மீது, தனியார் நிறுவன உரிமையாளர் ஒருத்தர் புகார் குடுத்திருக்கார்...

''அதுல, 'உங்க நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., பாக்கியை அதிகமா வசூலிக்கிற அளவுக்கு பைல் ரெடி பண்ணிடுவேன்... அப்படி பண்ணாம இருக்கணும்னா, சில லட்சங்களை வெட்டுங்க'ன்னு பெண் அதிகாரி கேட்டதா குறிப்பிட்டிருக்காருங்க...

''பெண் அதிகாரிக்கு, எழிலகத்தில் இருக்கிற ஒரு அதிகாரி ஆதரவு இருந்திருக்குது... இந்த புகார் சம்பந்தமா விசாரணை நடத்தி, பெண் அதிகாரியை அம்பத்துாருக்கும், எழிலக அதிகாரியை கே.கே.நகருக்கும் மாத்தி விட்டுட்டாங்க...

''எழிலக அதிகாரி, கே.கே.நகருக்கு வந்துட்டதால, புகார் குடுத்த தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிடுவாரோன்னு தனியார் நிறுவனஉரிமையாளர் பயத்துல இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கனிமவளங்களை புது ரூட்டுல கடத்தறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர்மாவட்டம், மடத்து குளம் தாலுகாவில் இயங்கும் கல் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமா, ஒன்பதாறு செக்போஸ்ட் வழியா கேரள மாநிலம், மறையூர், மூணாறுக்கு அதிக அளவுல கனிம வளங்களை கடத்திண்டு இருந்தா ஓய்...

''இது சம்பந்தமா பல புகார்கள் போயும் அதிகாரிகள் கண்டுக்கல... இப்ப, ஒன்பதாறு செக்போஸ்ட் வழியா கனரக வாகனங்கள் போறது குறைஞ்சிடுத்து ஓய்...

''இதனால, கனிமவள கடத்தல் முடிவுக்கு வந்துட்டதா, இயற்கை ஆர்வலர்கள் நிம்மதியானா... ஆனா, கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறு, மறையூர் பகுதியில், கட்டுமான பணிகள் குறைஞ்சிடுத்தாம் ஓய்...

''இதனால, ரூட்டை மாற்றி மடத்துகுளம், பெதப்பம்பட்டி, நெகமம், கிணத்துக்கடவு வழியா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்துக்கு கனிமவளங்களைகடத்திண்டு போறா...

''தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள், 'சர் சர்'னு போறதால, பெதப்பம்பட்டி சுற்றுப்பகுதி கிராம மக்கள் பீதியில இருக்கா... இந்த புது ரூட்டுக்கு தி.மு.க., மக்கள் பிரதிநிதிகளின், 'புல் சப்போர்ட்' இருக்கறதால, அதிகாரிகள் வழக்கம் போல கண்ணை மூடிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us