PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:கோவை. வெள்ளலூர் அசோகர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 35. இவரது தாய் சந்திரா, 60; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த, 28ல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்திரா வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அங்குள்ள பஞ்., கிணற்றில் சந்திரா சடலமாக மிதப்பது தெரிந்தது. போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டனர். சந்திரா தற்கொலை செய்தாரா?, தவறி விழுந்து பலியானாரா என விசாரிக்கின்றனர்.