தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வழக்கில் சிக்கிய வாகனங்களை விற்கும் போலீசார்!

வழக்கில் சிக்கிய வாகனங்களை விற்கும் போலீசார்!

வழக்கில் சிக்கிய வாகனங்களை விற்கும் போலீசார்!


PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''சீட் கிடைக்காத விரக்தியிலும், வெளிநாட்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தேர்தல் பணிகள்ல ஈடுபட்டிருக்காருங்க...'' என்றபடியே, சுக்கு காபியை உறிஞ்சினார் அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ம.தி.மு.க., துணை பொது செயலர் மல்லை சத்யா, மன்சூரியா குங்பூ தற்காப்பு கலை சர்வதேச தலைவராகவும் இருக்காருங்க... தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ரெண்டு சீட் ஒதுக்கியிருந்தா, இவர் ஒண்ணுல நின்னிருப்பாராம்...

''ஆனா, ஒரு தொகுதி மட்டும், அதுவும் வைகோ மகனுக்கே போயிட்டதால, ஏமாற்றத்தை மறைச்சுக்கிட்டாருங்க... இந்தோ - பிரான்ஸ் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி முகாம், நாளை துவங்கி 28ம் தேதி வரை பிரான்ஸ்ல நடக்குதுங்க...

''இதுல மல்லை சத்யா பங்கேற்று, பிரான்ஸ் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் அழைப்பு விடுத்திருந்தாங்க... ஆனா, தேர்தல் பணிகள் காரணமா, அதுக்கும் அவரால போக முடியலை... அடுத்து செப்டம்பர்ல பிரான்ஸ்ல நடக்குற சிறப்பு முகாமுக்கு வர்றதா உறுதி குடுத்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சங்கங்கள் வச்சது தான் சட்டமா இருக்குன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''பள்ளிக்கல்வி துறையில், அமைச்சருக்கு நெருக்கமான சில சங்க நிர்வாகிகள் தான், துறை உயர் அதிகாரிகளுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வரா... பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தற பணியில இருக்கற ஆசிரியர்கள், தேர்தல் பணிக்கு போறப்ப, தேர்தலுக்கு முதல் நாள் விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு விடுப்பு தருவா ஓய்...

''ஆனா, இந்த முறை அமைச்சருக்கு நெருங்கிய சங்கம் ஒண்ணு, தேர்தலுக்கு ரெண்டு நாள் முன்னாடியே, அதாவது 17ம் தேதியும் முகாமுக்கு விடுப்பு தரணும்னு அதிகாரிகளிடம் கேட்டது... அதிகாரிகளும் வாய்மொழியா, 'ஓகே' சொல்லிட்டா ஓய்...

''ஆனா, இந்த உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் போய் சேரல... இதனால, பல ஆசிரியர்கள் 17ம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு வெட்டியா வந்துட்டு, விடுப்பு தகவலை கேள்விப்பட்டு, திரும்பி போனா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பறிமுதல் செய்ற வாகனங்களை வித்துடுதாங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில், மறைமலை நகர் போலீஸ் நிலையம் இருக்குல்லா... இங்க, வழக்குகள்ல பறிமுதல் செய்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை, ரெண்டு போலீசார், நைசா வெளியில தள்ளிட்டு போயிடுதாவ வே...

''வாகனங்கள்ல இருக்கிற பழுதுகளை சரி செய்து, நல்ல விலைக்கு வித்துடுதாவ... கடந்த சில மாதங்கள்ல மட்டும் இப்படி 10க்கும் மேற்பட்ட பைக்குகளை வித்து, காசு பார்த்திருக்காவ வே...

''சமீபத்துல கூட, 'ஹோண்டா டியோ' வாகனத்தை எடுத்துட்டு போய் வித்திருக்காவ... இது போக, ரெண்டு பேரும் ராத்திரி ரோந்து போறப்ப, இருசக்கர வாகனங்களை பறிமுதல் பண்ணிட்டு, மறுநாள் ஸ்டேஷனுக்கு வர்ற உரிமையாளர்களிடம், 2,000 முதல் 4,000 ரூபாய் வரை வசூல் பண்ணிட்டு, வாகனங்களை ஒப்படைக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''வாங்க பிரகாஷ் சார்... ஆத்துல எல்லாரும் ஷேமமா இருக்கால்லியோ...'' என, நண்பரிடம் குப்பண்ணா குசலம் விசாரிக்க, மற்றவர்கள் நடையை கட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us