sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சூதாட்ட சேவல்களை 'சூப்' வைக்கும் போலீசார்!

/

சூதாட்ட சேவல்களை 'சூப்' வைக்கும் போலீசார்!

சூதாட்ட சேவல்களை 'சூப்' வைக்கும் போலீசார்!

சூதாட்ட சேவல்களை 'சூப்' வைக்கும் போலீசார்!

1


PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''யார், யார் வர்றான்னு தெரிஞ்சுக்க தான், 21 கேள்விகளை கேட்டிருக்காளாம் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''விஜய் கட்சி மாநாடு சங்கதியா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஆமா... விக்கிரவாண்டியில நடத்த போற மாநாட்டு மேடையின் நீளம், அகலம், எத்தனை நாற்காலிகள் போடுவேள், முக்கிய பிரமுகர்கள் யார் யார் பங்கேற்க இருக்கான்னு போலீசார் கேட்டிருக்கால்லியோ...

''விஜய் கட்சி மாநாட்டுக்கு, அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்க, விஜய் தரப்புல ஏற்கனவே திட்டமிட்டிருக்கா ஓய்...

''ஆனா, அவா வருவாளா, மாட்டாளாங்கறதை போலீசாரால உறுதிப்படுத்திக்க முடியல... அதான், 21 கேள்விகள் கேக்கற சாக்குல, 'மாநாட்டுல முக்கிய பிரமுகர்கள் யார் யார் கலந்துக்க போறா'ன்னு கேட்டிருக்கா... இதுக்கு, நிதானமா ஆலோசனை நடத்தி, பதில் அளிக்க விஜய் தரப்பு முடிவு பண்ணியிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பள்ளி நுாற்றாண்டு விழா பஞ்சாயத்தை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியை துவங்கி, இந்த வருஷ கடைசியோட, 100 ஆண்டுகள் முடிய போகுதுங்க... இந்த பள்ளியில் தான், மறைந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் படிச்சிருக்காருங்க...

''இதனால, பள்ளியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பா கொண்டாட ஆளுங்கட்சி சார்பிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டி உருவாகியிருக்குது... பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க., முக்கிய புள்ளி, முதல்வர் ஸ்டாலினை அழைக்கணும்னுதிட்டம் போட்டிருக்காருங்க...

''ஆனா, இந்த பள்ளியில் படிச்ச, தமிழக காங்., மூத்த நிர்வாகி பட்டுக்கோட்டை ராஜேந்திரன், தன் சொந்த செலவில்,திருவள்ளுவர் சிலையை பள்ளி வளாகத்தில் அமைச்சு, அதை ராகுல் வந்து திறக்கணும்னு பிளான் போடுறாருங்க...

''இதுக்கு மத்தியில,சில தனி நபர்கள் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி, நுாற்றாண்டு விழாவை கொண்டாட, தனியா வசூல் வேட்டை நடத்துறாங்க... 'இதை,பள்ளிக்கல்வி அமைச்சர் தடுத்து நிறுத்தணும்'னு ஊர் மக்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சேவல்களை பிடிச்சு, சூப் வச்சிடுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' என்றார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், சங்ககிரி சப் - டிவிஷனுக்கு உட்பட்ட தேவூர் பகுதியில, பல இடங்கள்ல சேவல் சண்டை சூதாட்டம் நடக்கு... பல சூதாட்டங்கள், போலீசாருக்கு தெரிஞ்சு தான் நடக்குன்னு சொல்லுதாவ வே...

''இது சம்பந்தமா, தேவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் தகவல் தந்தா, அங்க போலீசார் போறதுக்குள்ள, சூதாட்ட கும்பலுக்கு தகவல் போயிடுது... அவங்க தப்பிச்சு ஓடிடுதாவ வே...

''அதையும் மீறி சிலர் பிடிபட்டாலும், அவங்க மேல வழக்கு எதுவும் போடாம, விரட்டி அடிக்கிற போலீசார், சண்டை சேவல்களை தங்களது வீடுகளுக்கு எடுத்துட்டு போய், அடிச்சு சூப், குழம்புன்னு வச்சு சாப்பிட்டிருதாவ... 'இந்த ஸ்டேஷன் போலீசாரை ஒட்டுமொத்தமா மாத்துனா தான், சேவல் சூதாட்டத்தை தடுக்க முடியும்'னு மக்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us