/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தக்காளி வரத்து அதிகரிப்பு விலை ரூ.60க்கு சரிவு
/
தக்காளி வரத்து அதிகரிப்பு விலை ரூ.60க்கு சரிவு
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தக்காளி வரத்து உள்ளது.
சென்னைக்கு தினமும் 1,200 டன் தக்காளி தேவை உள்ளது. வரத்து குறைவு காரணமாக, கடந்த சில நாட்களாக, 500 முதல்- 550 டன் தக்காளி மட்டுமே வந்ததால், 1 கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று, 650 டன் தக்காளி வந்துள்ளது. இதையடுத்து, கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து, 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது.
குறிப்பாக நேற்று, கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.