sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?

நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?

நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?


PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுராந்தகம்,:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது மற்றும் 11வது வார்டில், மோச்சேரி பகுதி அமைந்துள்ளது. மதுராந்தகத்தில் இருந்து மோச்சேரி வழியாக பாப்பநல்லுார் வரை, தடம் எண்: டி16 அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், அவ்வழியாக சென்ற பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தற்போது, அவ்வழியாக இயக்கப்பட்ட பேருந்து, அய்யனார் கோவில், மொறப்பாக்கம், கழினிப்பாக்கம் வழியாக, பாப்பநல்லுார் சென்று வருகிறது. அதனால், மோச்சேரி, புதுார், அருந்ததிபாளையம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தோர், மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்ல அவதிப்படுகின்றனர்.

எனவே, நிறுத்தப்பட்ட தடம் எண்: டி16 பேருந்தை, மீண்டும் மோச்சேரி வழியாக இயக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us