தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/போலி சான்றில் வேலை 3 காவலர்கள் 'டிஸ்மிஸ்'

போலி சான்றில் வேலை 3 காவலர்கள் 'டிஸ்மிஸ்'

போலி சான்றில் வேலை 3 காவலர்கள் 'டிஸ்மிஸ்'


PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, புதிதாக பணிக்கு சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், 2023 டிசம்பரில் வேலைக்கு சேர்ந்தனர்.

அவர்களில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெபா பர்வீன், 25, லக்கி யாதவ், 27, சவுகினி யாதவ், 25, ஆகிய மூன்று பெண்களின் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பி விசாரித்த போது, அவர்களது முகவரி சான்றிதழ் போலி என்பது தெரிந்தது.

இதையடுத்து, மூவரையும் பணி நீக்கம் செய்து, மத்திய தொழிற் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவபத்மா உத்தரவிட்டார். அவர் அளித்த புகாரில், மூவர் மீதும் தக்கோலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us