/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நள்ளிரவில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு
/
நள்ளிரவில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு
PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM
ஓட்டேரி, ஓட்டேரியில், வீட்டின் முன் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டால், மக்கள் பீதியடைந்தனர்.
சென்னை, ஓட்டேரி, ஸ்ட்ராஹன்ஸ் சாலை மூன்றாவது தெருவிலுள்ள கோரி பேகம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரது வீடுகளின் முன், நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில், இரண்டு 'பைக்'குகளில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றனர்.
அலறியடித்து எழுந்தஅப்பகுதியினர், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கூற, ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், 16 மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
நாட்டுவெடி பட்டாசுகளை, விளையாட்டாக வெடித்தது தெரிந்தது. நால்வரையும், பிணையில் வெளிவரக்கூடிய பிரிவில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.