தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/த.வெ.க., பிரமுகரின் கஜானாவாக மாறிய இளைஞரணி நிர்வாகி!

த.வெ.க., பிரமுகரின் கஜானாவாக மாறிய இளைஞரணி நிர்வாகி!

த.வெ.க., பிரமுகரின் கஜானாவாக மாறிய இளைஞரணி நிர்வாகி!


PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘‘ப ட்டம் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாருங்க...’’ என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

‘‘யார் ஓய் அது...’’ என கேட்டார் குப்பண்ணா.

‘‘தி.மு.க., ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.,யா இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்... அப்ப, கரூர்ல விஜய் பொதுக் கூட்டத்துல 41 பேர் பலியானப்ப, விஜய் மீது குற்றம் இருக்கிற மாதிரி பேட்டி குடுத்தாருங்க...

‘‘த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், இவரை ஆயுதப்படை டி.ஜி.பி.,யா, ‘டம்மி’ பதவிக்கு துாக்கி அடிச்சிட்டாங்க... ஆனாலும் இவரது ஆதரவாளர்கள் சிலர், நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியா நடிச்ச, ‘துரைசிங்கம்’ பெயரை இவருக்கு சூட்டி, சமூக வலைதளங்கள்ல புகழ்ந்திருந்தாங்க...

‘‘இதை பார்த்து அதிர்ச்சியான டேவிட்சன், ‘எனக்கு விளம்பரமோ, அனுதாபமோ, புகழ்ச்சியோ தேவையில்ல... என் மதிப்பு எனக்கு தெரியும்... தயவு செய்து இது போன்ற பதிவுகளை தவிர்க்கணும்’னு சமூக வலைதளத்துல வேண்டுகோள் விடுத்திருக்காருங்க...’’ என்றார் அந்தோணிசாமி.

‘‘எம்.எல்.ஏ., வழிக்கு வந்துட்டாரு வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘எந்த கட்சியில பா...’’ என கேட்டார் அன்வர்பாய்.

‘‘விருதுநகர் த.வெ.க., – எம்.எல்.ஏ., செல்வம், கட்சியில மாவட்டச் செயலராகவும் இருக்காரு... இந்த மாவட்டத்துக்கு ஜெகதீஸ்வரி, கீர்த்தனான்னு ரெண்டு பெண் அமைச்சர்கள் இருக்காவ வே...

‘‘இவங்க நிகழ்ச்சிகளுக்கு, எம்.எல்.ஏ., பெரும்பாலும் தாமதமாகவே வர்றாரு... மாவட்டச் செயலர் என்ற முறையில், நிர்வாகிகள் யாரையும் அழைச்சிட்டு வர்றதும் இல்ல வே...

‘‘இதனால கடுப்பான அமைச்சர்கள் ரெண்டு பேரும், ‘எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீங்க மட்டும் தனியா வந்தா என்ன அர்த்தம்’னு, சமீபத்துல செல்வத்தை வறுத்து எடுத்துட்டாவ... அவரது செயல்பாடுகள் பத்தி கட்சி மேலிடத்துக்கும் புகார் பண்ணிட்டாவ... இதனால, இப்ப எல்லாம் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ., ஆஜராகிடுதாரு வே...’’ என்றார் பெரியசாமிஅண்ணாச்சி.

‘‘இளைஞரணி நிர்வாகி பணத்துல ஜாலியா வலம் வர்றாரு பா...’’ என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

‘‘த.வெ.க.,வின் சென்னை மாவட்ட நிர்வாகி ஒருத்தருக்கு, அவரது கட்சியின் இளைஞரணி நிர்வாகி தான் கஜானாவா இருக்காரு... அதாவது, ‘கட்சியில முக்கிய பதவி வாங்கி தர்றேன்... சென்னை மாநகராட்சி கவுன்சிலராக்குறேன்... உன் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தர்றேன்’னு சொல்லியே அவரிடம் பல லட்சம் ரூபாயை கறந்துட்டாரு பா...

‘‘மாவட்ட புள்ளியை நம்பி அவரது பின்னாடியே சுத்திய இளைஞரணி நிர்வாகி, தான் வச்சிருந்த ரெண்டு, ‘மெடிக்கல் ஷாப்’களையும் இழுத்து மூடிட்டாரு... மாவட்ட நிர்வாகியின் காருக்கான மாதாந்திர தவணையை இளைஞரணி நிர்வாகி தான் கட்டுறாரு பா...

‘‘மாவட்ட நிர்வாகி வெளியூர் போனா, எல்லா செலவுகளையும் இளைஞரணி நிர்வாகி தான் பண்றாரு... ‘தி.நகர் நடைபாதை வியாபாரிகளை மிரட்டி, ‘கட்டிங்’ கேட்கிற மாவட்ட நிர்வாகியால, ஆளுங்கட்சிக்கு தான் கெட்ட பெயர்’னு, அந்த கட்சியினர் புலம்புறாங்க பா...’’ என முடித்தார் அன்வர்பாய்.

‘‘இப்படி உட்காரும் சுரேந்தர்... உம்ம குருநாதர் வேல்முருகன் இப்ப தான் கிளம்பினார் ஓய்...’’ என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us