sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

குவியும் மாமூலால் போதையில் மிதக்கும் அதிகாரி!

/

குவியும் மாமூலால் போதையில் மிதக்கும் அதிகாரி!

குவியும் மாமூலால் போதையில் மிதக்கும் அதிகாரி!

குவியும் மாமூலால் போதையில் மிதக்கும் அதிகாரி!

2


PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏலக்காய் டீக்கு ஆர்டர்தந்தபடியே, ''கணக்கெடுக்க சொல்லியிருக்காங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாரு, எதை கணக்கெடுக்கப் போறாங்க...''எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சமீபத்துல நடந்துச்சே... இதுல, 'அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்... ஆட்சியின்சாதனைகளை பொதுமக்களிடம் கட்சியினர்விளக்கி சொல்லணும்'னுஉத்தரவு போட்டிருக்காங்க பா...

''அதோட, 'எந்தெந்த மாவட்டங்கள்ல, என்னென்ன பிரச்னைகள்இன்னும் தீர்க்கப்படாம இருக்கு... எந்தெந்த திட்டங்கள் பாதியில் நிற்குதுன்னு கட்சியினர் வாயிலா கணக்கெடுத்து,தலைமைக்கு தெரிவிக்கணும்'னும் உத்தரவு போட்டிருக்காங்க... சீக்கிரமே செயற்குழுவைகூட்டி, பிரசார வியூகங்கள் வகுக்கவும் முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மாஜி ஆசிரியரிடம்பணம் பறிக்காவ வே...''என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர், காரை என்ற ஊர்ல அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியரா வேலை பார்த்தாரு... இன்னும் ரெண்டு வருஷத்துல, 'ரிட்டயர்' ஆக இருந்தாருவே...

''இவரது சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய, உதவித் தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்பி வச்சாவ... இதுல, ஆசிரியர் பட்டயப்படிப்பில், ரெண்டு பாடங்கள்ல பெயிலானவர்னும், ஆனா, தேர்ச்சி பெற்றதா போலி சான்றிதழ்குடுத்து, 1998ல் அரசு ஆசிரியரா வேலைக்கு சேர்ந்ததும் தெரிஞ்சிட்டு வே...

''இதனால, போன ஜூன் 20ம் தேதி, அவரை, 'டிஸ்மிஸ்' பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாவ... மாசம், 1 லட்சம் ரூபாய்க்குமேல சம்பளம் வாங்கியவர், 100 ஏக்கருக்கு மேல நிலம், கார்,பங்களான்னு நிறைய சொத்துக்கள் சேர்த்துட்டாரு வே...

''இப்ப, 'இவர் வாங்கியசம்பளம் முழுதையும், அவரிடம் இருந்து திருப்பிவசூலிக்கணும்'னு சமூக ஆர்வலர் ஒருத்தர், கல்வித்துறைக்கு புகார் அனுப்பியிருக்காரு... இந்த புகாரை காட்டி மிரட்டியே, 'மாஜி' ஆசிரியரிடம் கல்வித்துறைமற்றும் போலீஸ் அதிகாரிகள், 'கட்டிங்' வாங்கிட்டு இருக்காவ...

''இதுக்கு மத்தியில, மாஜி ஆசிரியரும், தன்சொத்துக்களை மனைவி,பிள்ளைங்க பெயர்களுக்குமாத்திட்டதோட, கைது பயத்தால முன்ஜாமினுக்கும் முயற்சி பண்ணிட்டுஇருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''மரக்கடத்தலை கண்டுக்கல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனப்பகுதியில், வனவிலங்குகளை சிலர் தொடர்ந்து வேட்டையாடறா... ஆனாலும், இந்த பகுதி வன அதிகாரி எதையும் கண்டுக்கறது இல்ல ஓய்...

''ஏற்காடு மலையில இருந்து தேக்கு, மலைவேம்பு, சவுக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்திட்டு போறா... தினமும், மூணு முதல் அஞ்சு லாரிகள்ல, மரங்களை கடத்திட்டு போறதையும் வனத்துறை அதிகாரி கண்டுக்காம இருக்கார் ஓய்...

''அதே நேரம், வேட்டை கும்பலிடம் பாரஸ்டர்கள் மாமூல் வசூல் பண்ணி, அதிகாரிக்கு பங்கு குடுத்துடறா... அதே மாதிரி, மரக்கடத்தல் லாரிகளிடமும்தலா, 5,000 ரூபாய் அதிகாரிக்கு வந்துடறது...

''இப்படி தினமும் கத்தை கத்தையா பணம்குவியறதால, அதிகாரி, 'புல்' போதையிலேயே இருக்கார் ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us